இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரின், இன்றைய போட்டியில் இந்திய அணி வீரரான மகேந்திர சிங் டோனி சதம் அடித்து ஜார்கண்ட் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றித்தலைவராக வலம் வந்தவர் டோனி. டோனி தற்போது இந்திய அணிக்கான தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின் ஐபிஎல் போட்டியின் புனே அணியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார்.
இருப்பினும் உள்ளூர் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஜார்கண்ட் அணிக்கு தலைவராக டோனி தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் விஜய் ஹசாரே தொடருக்கான போட்டியின் ஜார்கண்ட் அணியும், சட்டீஸ்கர் அணியும் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜார்கண்ட் அணிக்கு வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜார்கண்ட் அணி பரிதாப நிலையில் இருந்தது.
இதனால் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட டோனி அணியின் எண்ணிக்கையை சீரான இடைவெளியில் உயர்த்தினார். இதனால் அணியின் எண்ணிக்கையும் உயர்ந்தது. அதன் பின் அதிரடி காட்டத்துவங்கிய டோனி சட்டிஸ்கர் வீரர்களின் பந்துவீச்சி வெளுத்து வாங்கினார்.
இதனால் சதம் கடந்த டோனி 129 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸ்ர்கள் அடங்கும். அதன் பின் துடுப்பெடுத்தாடிய சட்டீஸ்கர் அணி 165 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.