பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மகன் எடின்ஹோவுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.
பீலேவின் மகனான எட்சன் சோல்பி டோ நாசிமென்ட்டோ என்பவரும் கால்பந்தாட்ட வீரராவார். சாண்டோஸ் கால் பந்தாட்ட கிளப் அணியில் கோல் கீப்பராக விளையாடி வந்தார்.
இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் கள்ளத்தனமாக பணப் பரிமாற்றம் செய்த வழக்கில் 2005ம் ஆண்டு எடின்ஹோ கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த பிரேசில் நீதிமன்றம் 2014ம் ஆண்டு 33 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அவரது தண்டனை காலத்தை 12 ஆண்டுகள் 10 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அவர் விரைவில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து குற்றங்களையும் மறுத்துள்ள எடின்ஹோ கூறியதாவது, நிச்சியமாக நான் நிரபராதி என்பதை நிருபிப்பேன் என உறுதியளித்துள்ளார்.